| ADDED : பிப் 11, 2024 11:08 PM
திருத்தணி, -திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் பூனிமாங்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கே.ஜி.கண்டிகையில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமை வகித்தார். பட்டதாரி கணித ஆசிரியர் நரசிம்மன் வரவேற்றார். இதில் மாணவர்கள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து மாணவ - மாணவியர் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும், பள்ளி அளவில் நடந்த வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதே போல் பூனிமாங்காடு பள்ளியிலும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு ஆண்டு விழா நடந்தது.வீரகநல்லுார் ஊராட்சி இஸ்லாம் நகர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியை ரீச்சல்பிரபாவதி தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் காதர்பாஷா பங்கேற்று பள்ளி அளவில் விளையாட்டு போட்டிகள், தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.