உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆண்டார்மடத்தில் ஆற்று மணல் திருட்டு இரவில் சமூக விரோதிகள் அட்டூழியம்

 ஆண்டார்மடத்தில் ஆற்று மணல் திருட்டு இரவில் சமூக விரோதிகள் அட்டூழியம்

பொன்னேரி: ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் திருட்டில் ஈடுபடுவதால், அங்குள்ள கனிமளம் சூறையாடப்பட்டு வருகிறது. பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக ஆரணி ஆறு பயணித்து, பழவேற்காடு கடலில் முடிவடைகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆண்டார்மடம் கிராமத்திலும், ஆற்றுநீர் ஆர்ப்பரித்து சென்றது. தற்போது, ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட ஆற்று மணல், ஆண்டார்மடம் பகுதியில் குவிந்திருக்கிறது. இதை, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் டிராக்டர்கள் மூலம் கடத்தி, வெளியிடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அருகே உள்ள தடுப்பணைக்கு ஆபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கனிமளம் சூறையாடப்பட்டு வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆண்டார்மடம் கிராமத்தில் ஆற்று மணல் திருட்டை தடுக்க, காவல், வருவாய் மற்றும் நீர்வள துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி