அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
திருவள்ளூர்:தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது. நடப்பு 2024ம் ஆண்டிற்கான விருதுக்கு தகுதியானோர், தங்களை பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, வரும் 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.