உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி மரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்

நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி மரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ்,19. இவரது குடும்ப சொத்தாக, 40 சென்ட் நிலம் உள்ளது.இந்த நிலத்தை. அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோர், மேற்கண்ட, 40 சென்ட் நிலம் எங்களுக்கு சொந்தமானது. உடனடியாக காலி செய்ய வேண்டும் என ராகேஷ்யை மிரட்டியுள்ளனர்.இது குறித்து ராகேஷ் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். புகார் மீது நடவடிக்கை இல்லாததால் ராகேஷ் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து, உடல்மேல் பெட்ரோல் ஊற்றி அங்குள்ள வேப்பமரத்தில் ஏறிக் கொண்டார். தகவல் அறிந்ததும், திருவள்ளூர் போலீசார் அரைமணி நேரத்திற்கு மேல் போராடி மரத்தில் இருந்து ராகேைஷ இறங்கி, தண்ணீரை ஊற்றி, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்த்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை