உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பறிமுதல் வாகனங்கள் வரும் 14ம் தேதி ஏலம்

பறிமுதல் வாகனங்கள் வரும் 14ம் தேதி ஏலம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பிப்., 14ல் ஏலம் விடப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்ட காவல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட, 34 வாகனங்களை ஏலம் விட, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஏழு இருசக்கர வாகனம், ஒரு ஆட்டோ, 25 நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு ஆறு சக்கர வாகனம் என இவையனைத்தும், பிப்., 14ம் தேதி காலை 10:00 மணியளவில், திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே ஏலம் விடப்பட உள்ளது.வாகனங்களை ஏலம் கேட்க வருவோர், முன் வைப்பு கட்டண தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு 1,000 ரூபாய், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு, 5,000 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு, அரசு விற்பனை வரி 12 சதவீதம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு, 18 சதவீதம் உடனடியாக செலுத்த வேண்டும்.வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டுத் தொகை, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்று, வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டண தொகை, ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை