உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் குளங்களில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு விழிப்புணர்வு

கோவில் குளங்களில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகளவில் இருப்பதால், கலெக்டர் பிரதாப், மக்கள் இடையே பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துப்புரவு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.அந்த வகையில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில் திருவள்ளுர் நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து 'பிளாஸ்டிக்' கழிவுகள் சேகரிப்பு மற்றும் துாய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, பேரணியை நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் மாசு கட்டுப்பட்டு வாரியத்துடன் இணைந்து, கடந்த மாதம், நீர்நிலைகளில் உள்ள 'பிளாஸ்டிக்' கழிவு சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.இம்மாதம், கோவில் பகுதிகளில், 'பிளாஸ்டிக்' கழிவு சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.அதன் அடிப்படையில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் ஆகிய பகுதிகளில் குளங்களில் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.பொதுமக்கள் ஒரு முறை பயன்படுத்தப்படும் 'பிளாஸ்டிக்' போன்ற பொருட்களை கண்ட இடங்களில் போடுவதை தவிர்த்து, குப்பை தொட்டிகளில் போட்டு சுகாதாரத்தை உருவாக்கிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின், மஞ்சப் பை, மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் ஆயுஷ் குப்தா, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வ இளவரசி, நகராட்சி தலைவர் உதயமலர் உட்பட பலர் பங்கேற்றனர்.* திருத்தணி மலைக்கோவிலில், துாய்மை பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் சரஸ்வதி, கோவில் இணை ஆணையர் ரமணி, நகராட்சி பொறியாளர் விஜயராஜ காமராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதில், நகராட்சி துப்புரவு ஊழியர்கள், கோவில் ஊழியர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் மலைக்கோவில் வளாகம் முழுதும் துாய்மை பணிகள் மேற்கொண்டும், 1,800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை