உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காட்டில் நாளை மீன்பிடிக்க தடை

பழவேற்காட்டில் நாளை மீன்பிடிக்க தடை

பழவேற்காடு:ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது.ராக்கெட் ஏவப்படும் நேரங்களில், பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும், பழவேற்காடு கடல் பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நாளை மாலை, 5:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி - சி.எப் 14 இன்சாட் - 3டிஎஸ் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.அதையொட்டி, மீனவர்கள் நாளை காலை முதல் கடலில் மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்து உள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை நேற்று, பொன்னேரி மீன்வளத்துறை சார்பில், மீனவ கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதில், 'அசம்பாவிதங்களை தவிர்த்திடும் பொருட்டு மீனவர்கள் யாரும் மீன்பிடித் தொழிலுக்கு செல்லக்கூடாது' என மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை