உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலைஅடுத்து, ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருவள்ளூரில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, தென்னக ரயில்வே சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து, போனை துண்டித்துள்ளார். இதையடுத்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார், ரயில் நிலையத்தில் உள்ள ஆறு நடைமேடைகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, விசாரணை நடந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை