உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  காப்புக்காட்டில் இறந்து கிடந்த மயில் புதைப்பு

 காப்புக்காட்டில் இறந்து கிடந்த மயில் புதைப்பு

பள்ளிப்பட்டு: காப்புக்காட்டில் இறந்து கிடந்த மயிலை, வனத்துறையினர் மீட்டனர். மயிலின் சடலத்தை, கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிப்பட்டு அடுத்த நொச்சிலி காப்புக்காட்டில் மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நொச்சிலி காப்பூர் கண்டிகை அருகே, மயில் ஒன்று இறந்து கிடப்பதாக, பள்ளிப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்ப வ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஆண் மயிலின் சடலத்தை மீட்டனர். பின், பள்ளிப்பட்டு கால்நடை மருத்துவர் சுல்தானா தலைமையிலான மருத்துவ குழுவினர், மயிலின் சடலத்தை காப்புக்காட்டில் மயிலின் புதைத்தனர். பரிசோதனை முடிவுக்கு பிறகே மயில் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ