உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 34. இவரது மனைவி ரேவதி, 29. கடந்த ஒரு மாதமாக ரேவதி மனரீதியாக பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டின் ஒரு அறையில், ரேவதி தனக்குத் தானே பேப்பர் வைத்து தீ வைத்து கொண்டார். அப்போது, சமையல் செய்து கொண்டிருந்த இவரது தாய், தண்ணீர் கொண்டு தீயை அணைத்தார்.இதில் படுகாயமடைந்த ரேவதி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இதுகுறித்து, இவரது தாய் இந்திராகாந்தி கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ