உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கழிவுநீர் வாகனம் வாங்கியும் பயனில்லை

 கழிவுநீர் வாகனம் வாங்கியும் பயனில்லை

பொதட்டூர்பேட்டை: -: பேரூராட்சிக்கு புதிய கழிவு நீர் வாகனம் வாங்கியும், பயன்படுத்த முடியாமல் உள்ளது. பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, மேல் பொதட்டூர், வாணிவிலாசபுரம், புதுார், சவுட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுகாதார வளாகங்களில் இருந்து கழிவுநீரை அகற்றுவதற்காக, கடந்த நான்கு மாதங்களுக்கு முன், புதிய கழிவுநீர் வாகனம் வாங்கப்பட்டது. இந்த வாகனம் இதுவரை செயல்பாட்டிற்கு வராமல், பேரூராட்சி அலுவலக நுழைவாயில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாகனத்தை உடனடியாக, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேரூராட்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிதாக வந்துள்ள கழிவுநீர் வாகனம் பதிவு செய்யப்படவில்லை. விரைவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை