உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

 மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

ஆவடி: கீழ்ப்பாக்கம், தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜேக்கப் எபினேசர், 53; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மதியம் சாப்பிட்டு முடித்து, 'மாருதி ஸ்விப்ட்' காரில் அம்பத்துாரில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருமுல்லைவாயில், வைஷ்ணவி கோவில் அருகே வளைவில் திரும்பும் போது, துாக்க கலக்கத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில், கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பகுதி மக்கள் அவரை மீட்டனர். காரில் 'ஏர் பேக்' இருந்ததால், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஜேக்கப் எபினேசர் உயிர் தப்பினார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி