மேலும் செய்திகள்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்து அச்சம்
3 minutes ago
மகளிர் குழு கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
4 minutes ago
மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப பலி
11 minutes ago
கடம்பத்துார்:திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சி. இந்த நெடுஞ்சாலை வழியே, தினமும் 1,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், பகல் நேரங்களில், நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதால் வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர்.நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகள் குறித்து அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காதது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 minutes ago
4 minutes ago
11 minutes ago