| ADDED : பிப் 05, 2024 11:31 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி செயல் அலுவலராக இருந்த யமுனா, செங்குன்றம், நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு மாற்றப்பட்டார். அங்கு, செயல் அலுவலராக இருந்த பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலராக மாற்றப்பட்டார்.ஆரணி பேரூராட்சி செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பில் இருந்த அர்ஜுனன் விடுவிக்கப்பட்டார். தற்போது, நாமக்கல் மாவட்டம், சீராப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த தாமோதரன், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலராக மாற்றப்பட்டார்.ஓரிரு தினங்களில், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆரணி பேரூராட்சியின் புதிய செயல் அலுவலர்கள் பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.