உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவேற்காடில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்

திருவேற்காடில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்

திருவேற்காடு: தமிழகத்தில், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லம் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் வினியோகம் செய்யும் 'முதலமைச்சரின் தாயுமானவர்திட்டத்தை' முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, வடக்கு மாட வீதி, கூட்டுறவு நியாய விலைக்கடையில், 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை' அமைச்சர் நாசர் நேற்று துவக்கி வைத்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' வாயிலாக, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்று கிழமைகளில், மேற்படி பயனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடி குடிமை பொருட்கள் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !