உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்களுடன் முதல்வர் திட்டம் 77 மனுக்களுக்கு உடனடி தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டம் 77 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர், நார்த்தவாடா, வீரராகவபுரம் உட்பட ஒன்பது ஊராட்சிகளைச் சேர்ந்தோர் பயன்பெறும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், திருவாலாங்காடில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.முகாமை திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் துவக்கி வைத்தார். திருவாலங்காடு பி.டி.ஓ., கலைச்செல்வி தலைமை தாங்கினார்.இதில் வருவாய், மின்வாரியம், ஊரக வளர்ச்சி உட்பட, 19 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வாரிசு, ஜாதி, வருமானச் சான்றிதழ், மின் இணைப்பு உட்பட, 540 மனுக்கள் பெறப்பட்டனஇதில், 77 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு பின், 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை