உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகரி பஸ் நிலையம் ஆக்கிரமிப்பு நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

நகரி பஸ் நிலையம் ஆக்கிரமிப்பு நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

நகரி:சித்துார் மாவட்டம் நகரி பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி, பள்ளிப்பட்டு, புத்துார், ரேணிகுண்டா, நாகலாபுரம், திருப்பதி மற்றும் காளஹஸ்தி போன்ற இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில், அதிகாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை பேருந்துக்காக பயணியர் காத்திருப்பர். இந்நிலையில் நகரி நகராட்சி நிர்வாகம் முறையாக பேருந்து நிலையத்தை பராமரிக்காமல் மெத்தனம் காட்டி வந்தனர்.இதை பயன்படுத்தி சிலர், பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து காய்கறி மற்றும் பழக்கடைகள் வைத்துள்ளனர். இதனால், நகரிக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிலையத்தில் நிற்காமல், மாநில நெடுஞ்சாலையில் நின்று செல்கின்றன.ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால், பயணியர் கடும் சிரமப்படுகின்றனர். எனவே கலெக்டர் ஒரு முறை நகரி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பேருந்து நிலையத்தில் சிமென்ட் தளம் அல்லது தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை