உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊரக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு டிசம்பருக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ஊரக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு டிசம்பருக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்கு, 36.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 85 ஊராட்சிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சி பணிகள், டிசம்பருக்குள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் மொத்தம், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில்இ ஆண்டுக்கு ஒவ்வொரு ஒன்றியத்திலும், குறைந்தபட்சம் ஐந்து ஊராட்சிகளில் இருந்து அதிகபட்சமாக, 12 ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தகுதி வாய்ந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படுகின்றன.பின், ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கு தேவையான நிதியை, மாநில அரசு வழங்குகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான 2025 - 26ம் ஆண்டிற்கான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு, 13 ஒன்றியத்தில் 85 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த ஊராட்சிகளில், சிமென்ட் சாலை, நெற்களம், சிமென்ட் கல் சாலை, குளம், குட்டை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு, ஊராட்சி அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.இந்த பணிகளுக்கு, அந்தந்த ஒன்றிய நிர்வாகம் திட்ட மதிப்பீடு தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கீடு கேட்டு பரிந்துரை கடிதம் அனுப்பியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், 85 ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்வதற்கு, மொத்தம், 36.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இப்பணிகள், வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, மாவட்ட நிர்வாகம், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், புழல் ஒன்றியம் தவிர மீதமுள்ள, 13 ஒன்றியங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 28 ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம், 25 அங்கன்பாடி மையங்களுக்கு புதிய கட்டடம் உட்பட அடிப்படை வசதிகள் ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும்.இப்பணிகளுக்கு, ஓரிரு நாட்களில் 'டெண்டர்' விடப்படும். தொடர்ந்து பணிகளை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக ஒன்றியங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பணிகள் நடைபெறும் ஊராட்சிகள் விபரம்

ஒன்றியம் ஊராட்சிகள் எண்ணிக்கை மொத்த தொகை (ரூ.கோடியில்)எல்லாபுரம் 8 3.58கும்மிடிப்பூண்டி 11 4.84கடம்பத்துார் 8 3.12மீஞ்சூர் 10 4.66பள்ளிப்பட்டு 6 2.46பூந்தமல்லி 2 0.90பூண்டி 8 3.21ஆர்.கே.பேட்டை 6 2.50சோழவரம் 7 2.75திருத்தணி 5 2.04திருவாலங்காடு 8 3.06திருவள்ளூர் 6 2.64வில்லிவாக்கம் 1 0.43மொத்தம் 85 36.19


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ