உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  விபத்து ஏற்படுத்தாத பஸ் ஓட்டுநருக்கு பாராட்டு

 விபத்து ஏற்படுத்தாத பஸ் ஓட்டுநருக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் விபத்து ஏற்படுத்தாத, 15 ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழக அரசு போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று, ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளூர் மண்டல விழுப்புர கோட்ட அரசு போக்குவரத்து கழக துணை பொதுமேலாளர் வெங்கடேசன், கிளை மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில், திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் நளினிதேவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஓட்டுநர்களுக்கு விபத்து இல்லாமல் பணியாற்றுவது குறித்து பேசினார். கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளூர், திருத்தணி, கோயம்பேடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய ஐந்து பணிமனைகளில், விபத்து ஏற்படுத்தாத 15 ஒட்டுனர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை