உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் கரை சீரமைப்பை ஆய்வு செய்ய குழு

ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் கரை சீரமைப்பை ஆய்வு செய்ய குழு

பொன்னேரி:பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கலெக்டர் பிரதாப் கூறியதாவது:கொசஸ்தலை ஆற்றில் உள்ள கரைகள், கடத்தாண்டு மழையின்போது சேதமடைந்தன. ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட கரை சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உள்ளது.குழுவின் அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் வளர்க்கும் மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. போக்குவரத்திற்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் சுற்றும் மாடுகளை பிடித்து, பட்டிகளில் அடைக்க நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.முதல்முறை பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் அபராதம் விதித்து, பின் விடுவிக்கப்படும். இரண்டாவது முறை அதே உரிமையாளரின் மாடுகள் பிடிபட்டால், அவை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ