உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கோவிலில் ரீல்ஸ் எடுத்த மூன்று பெண்கள் மீது புகார்

 கோவிலில் ரீல்ஸ் எடுத்த மூன்று பெண்கள் மீது புகார்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன், முருகன் கோவில் தேர்வீதியில் ராஜகோபுரம் முன், இரண்டு பெண்கள் சினிமா பாடல்களுக்கு 'ரீல்ஸ்' எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதேபோல், முருகன் கோவிலின் உபகோவிலான கோட்டா ஆறுமுகசாமி கோவில் வளாகத்திலும், பெண் ஒருவர் சினிமா கவர்ச்சி பாடலுக்கு, 'ரீல்ஸ்' எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், நேற்று கோவில் நிர்வாகம், மூன்று பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்