| ADDED : டிச 10, 2025 06:46 AM
திருத்தணி: முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தேர்வீதியில் கான்கிரீட் தளம் சீரமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மலைக்கோவில் தேர்வீதி, கான்கிரீட் தளம் சேதம் அடைந்தும், ஆங்காங்கே பள்ளங்கள் இருந்தால் பக்தர்கள் நடந்து செல்வதற்கு கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பக்தர்கள் நலன்கருதி கோவில் நிர்வாகம், உபயதாரர் மூலம், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர்வீதி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முருகன் கோவில் தேர்வீதி, 40 மீட்டர் அகலம், 350மீட்டர் நீளம் உள்ளது. தற்போது தேர்வீதியில் கான்கிரீட் தளம் சேதமடைந்துள்ளதால், உபயதாரர் மூலம் தற்போது கான்கிரீட் தளம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள், ஒரு வாரத்திற்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.