மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
23 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
நகரி:ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நகரி பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி, பள்ளிப்பட்டு, சித்துார், நாகலாபுரம், திருப்பதி, காளஹஸ்தி மற்றும் புத்துார் ஆகிய இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதனால் பயணிகள் மற்றும் நகரி மக்கள் அதிகளவில் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் நகரி நகராட்சி நிர்வாகம், புதியதாக வணிக வளாகங்கள் கட்டுவதற்கு தீர்மானித்தது. இதை தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் முதற்கட்டமாக, 15 கடைகள் கட்டுவதற்கு, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடைகள் கட்டுவதற்கு 'டெண்டர்' விடப்பட்டது. தற்போது கடைகள் கட்டும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. மூன்று மாதத்திற்குள் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
23 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025