உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பா.ஜ., கட்சி அலுவலகம் கட்டும் பணி நிறுத்தம்

பா.ஜ., கட்சி அலுவலகம் கட்டும் பணி நிறுத்தம்

பெரியபாளையம், பெரியபாளையம் அருகே, மஞ்சங்காரணை ஊராட்சியில், சமுதாயக் கூடம் அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் பா.ஜ., கட்சி சார்பில் தேர்தல் அலுவலக கட்டுமான பணி நடந்து வந்தது. நேற்று கன்னிகைப்பேர் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று கட்டுமானப் பணிகளை நிறுத்தினர்.இதனால் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பா.ஜ., கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது. பெரியபாளையம் போலீசார் பேச்சு நடத்தினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை