மேலும் செய்திகள்
மளிகை கடையில் குட்கா உரிமையாளர் கைது
18-May-2025
கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி அருகே சூரவாரிகண்டிகை கிராமத்தில் உள்ள கடைகளில், குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று, அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள மளிகை கடை ஒன்றில், 65 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மண்டுபாண்டே, 42, அவரது மனைவி சந்தியாதேவி, 38, ஆகியோரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-May-2025