உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகன ஓட்டிகளை மிரட்டும் மாடுகள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

வாகன ஓட்டிகளை மிரட்டும் மாடுகள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், சிப்காட் சாலை பிரியும் இடத்தில், ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. அங்குள்ள கடைகளில் இரை தேடியதும், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்தபடி இளைப்பாறுகின்றன.இதனால், அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேம்பால இறக்கத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மாடுகளை கண்டதும் மிரண்டு போகின்றனர்.பல சமயம், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் திக்கு முக்காடி வாகனங்களை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் சுற்றி திரியும் மாடுகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும். அதன் உரிமையாளர்ளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்க விடுக்க வேண்டும். மீறும் பட்சத்தில், மாடுகளை பிடித்து கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை