உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  டிட்வா புயல் எதிரொலி: முருகன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவு

 டிட்வா புயல் எதிரொலி: முருகன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவு

திருத்தணி: 'டிட்வா' புயல் எதிரொலியாக, நேற்று முருகன் கோவிலுக்கு குறைந்தளவில் பக்தர்கள் வந்ததால், பொது வழியில், 30 நிமிடத்திலேயே மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. வழக்கமாக, வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்றால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருவர். நேற்று 'டிட்வா' புயல் எதிரொலியால் குறைந்தளவில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்தனர். இதனால், பொதுவழியில், 30 நிமிடத்திலேயே பக்தர்கள் நெரிசலின்றி மூலவரை தரிசித்தனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி