உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் பள்ளி மாணவ - மாணவியர் பீதி

 மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் பள்ளி மாணவ - மாணவியர் பீதி

ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்க பள்ளி அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், மாணவ - மாணவியர் பீதியில் உள்ளனர். அய்யனேரி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இச்சாலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, துாண்களும் வலுவிழந்துள்ளன. இரும்பு கம்பிகள் துருப்பிடித்துள்ளன. இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அரசு பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ