உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலாபுரத்தில் சேதமான தடுப்பணை

பாலாபுரத்தில் சேதமான தடுப்பணை

ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தை ஒட்டியள்ள ஆந்திர மாநில மலைகள், சிறந்த நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகின்றன. இந்த மலைகளில் இருந்து பாலாபுரம் வழியாக பாயும் ஓடைகளில், தற்போது நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த ஓடை வழியாக ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு ஏரிகளை சென்றடைகிறது. இந்நிலையில், பாலாபுரம் கிராமத்தின் தெற்கில் குடியிருப்பு பகுதியை ஒட்டி பாயும் ஓடையில், கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதமடைந்துள்ளது.தடுப்பணை மற்றும் ஓடையின் பக்கவாட்டு சுவர்களில் ஏற்பட்டுள்ள சேதத்தால், மண்ணரிப்பு ஏற்பட்டு வருகிறது. பருவமழை துவங்கியுள்ள நிலையில், ஓடையில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்து பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தடுப்பணை மற்றும் பக்கவாட்டு சுவர் மேலும் பலவீனமாகும் நிலை உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ