ஆமை வேக பணியால் பட்டாபிராமில் ஆபத்து
ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில், 'டொரெண்டோ' காஸ் குழாய் பதிக்கும் பணி, பல மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக, பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. பட்டாபிராம், ராதாகிருஷ்ணன் தெரு அருகே சி.டி.எச்., அணுகு சாலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது.அதில் குழாய் பதிக்கப்பட்ட நிலையில், பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை முறையாக மூட நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.