உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம் கீழ்நல்லாத்துார் பெண்கள் முற்றுகை

சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம் கீழ்நல்லாத்துார் பெண்கள் முற்றுகை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்நல்லாத்துார் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு பள்ளி அருகே அம்மன் கோவில், நியாய விலைக் கடை, ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை, இப்பகுதிவாசிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள தனியார் நிலத்தில், இப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியுள்ளார். இந்த பள்ளம் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால், பள்ளத்தை மூடுமாறு பகுதிவாசிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், முருகன் பள்ளத்தை மூட மறுப்பு தெரிவித்ததால், கீழ்நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று அப்பகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை மண் கொட்டி மூடினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மணவாள நகர் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதி பெண்கள், ஆபத்தான முறையில் சாலையோரம் பள்ளம் தோண்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, வருவாய்த் துறையினருடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதி அளித்தனர். பின், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ