உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பாம்பு கடித்து டெலிவரி ஊழியர் உயிரிழப்பு

 பாம்பு கடித்து டெலிவரி ஊழியர் உயிரிழப்பு

திருநின்றவூர்: திருநின்றவூர், கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகமணி, 45; டெலிவரி ஊழியர். இவர், கடந்த 8ம் தேதி காலை, வீட்டின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய கட்டைகளை ஒழுங்குபடுத்தி வைத்தபோது, வலது காலில் நல்ல பாம்பு கடித்து மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை