உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழைய அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற கோரிக்கை

பழைய அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சியில், பவானி நகர், பராசக்தி நகரில் உள்ள குழந்தைகள் பயில பி.டி.ஓ., அலுவலக வாயிலில், 8 ஆண்டுகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடிமைய கட்டடம் கட்டப்பட்டது.இந்த கட்டடம் உறுதித்தன்மையுடன் இல்லை என அதிகாரிகள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாற்றுக் கட்டடம் அதனருகே கட்டி பயன்பாட்டில் உள்ளது. பழைய கட்டடம் மூன்று ஆண்டுகளாக புதர்மண்டி காணப்படுகிறது. இக்கட்டடம் பாம்பு, பூச்சுகள், நாய்களின் இருப்பிடமாக மாறி உள்ளதால், மக்களுக்கு பி.டி.ஓ., அலுவலகம் சென்று வர அச்சமாக உள்ளது.பயன்பாடின்றி உள்ள இந்த கட்டடத்தை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ