உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு

திருத்தணி:முருகன் கோவிலில் சந்திர கிரகணத்திலும் நடை மூடாததால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய வந்திருந்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், மூலவரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சிலர் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். நேற்று சந்திர கிரகணத்தை ஒட்டி, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் மூடப்பட்டன. ஆனால், வழக்கம்போல திருத்தணி முருகன் கோவில், காலை 6:00 - இரவு 8:45 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ