உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

திருவள்ளூர்:கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள், அரசு ஐ.டி.ஐ.,யில் சேர நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூரில் புதிதாக துவக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், டெக்னீசியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், நெட்வொர்க் மெயின்டனன்ஸ், லிப்ட் அண்டு எஸ்கலேட்டர் மெக்கானிக், பிளம்பர் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு, 2025ம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையமானது, கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு தாரர்களுக்கு மட்டுமே. எட்டு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர், அனைத்து சான்றிதழ்களுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். பயிற்சியாளர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவியும் கிடைக்கும். மேலும், விபரங்களுக்கு 87784 52515, 82483 33532 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை