உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாவட்ட வாலிபால் போட்டி திருப்பாச்சூர் அணி சாம்பியன்

மாவட்ட வாலிபால் போட்டி திருப்பாச்சூர் அணி சாம்பியன்

திருத்தணி:திருத்தணி தளபதி பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், திருப்பாச்சூர் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தளபதி கே.விநாயகம் மேனிலைப் பள்ளி மற்றும் மகளிர் அறிவியல் கலைக் கல்லுாரி வளாகத்தில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஈஷா புத்துணர்வு வாலிபால் போட்டி, மூன்று நாட்களுக்கு முன் துவங்கியது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, மொத்தம் 75 அணிகள் பங்கேற்றன. நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் திருப்பாச்சூர், புல்லரம்பாக்கம் அணிகள் மோதின. இதில், திருப்பாச்சூர் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. புல்லரம்பாக்கம் அணி இரண்டாமிடமும், பாண்டரவேடு அணி மூன்றாமிடமும், சீனிவாசபுரம் அணி நான்காமிடமும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை, தளபதி கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.பாலாஜி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை