உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பைக் மோதி முதியவர் பலி

 பைக் மோதி முதியவர் பலி

ஆர்.கே.பேட்டை: பைக் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த கிருஷ்ணாகுப்பத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 70. இவர், நேற்று முன்தினம் கிருஷ்ணாகுப்பத்தில் இருந்து வங்கனுார் நோக்கி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த ராமலிங்கம், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி