உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  செடி, கொடிகளில் சிக்கிய மின்கம்பங்கள் போந்தவாக்கத்தில் அவலம்

 செடி, கொடிகளில் சிக்கிய மின்கம்பங்கள் போந்தவாக்கத்தில் அவலம்

ஊத்துக்கோட்டை: மின்கம்பங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், அவசர காலத்தில் பழுது நீக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் இருந்து போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், கச்சூர், சித்தஞ்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியில் கம்பங்கள் அமைத்து, கம்பி மூலம் மின்சாரம் செல்கிறது. இதில் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. தற்போது மழை பெய்து வரும் நிலையில், அவசர காலத்தில் பழுது பார்க்க கம்பத்தின் மேல் ஏற முடியாத நிலை உள்ளது. எனவே, ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சூழ்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ