உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏருசிவன் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ஏருசிவன் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பொன்னேரி: உப்பளம் - ஏருசிவன் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தில் இருந்து, ஏருசிவன் கிராமத்திற்கு, 2 கி.மீ.,க்கு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 96 லட்சம் ரூபாய் செலவில், 2023ல் சாலை புதுப்பிக்கப்பட்டது. இச்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அதிக சுமையுடன் செல்லும் கனரக வாகனங்களால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். எனவே, சாலை பள்ளங்களை சீரமைக்கவும், கனரக வாகனங்கள் செல்லும் பகுதிகளில் கூடுதல் தரத்துடன் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை