உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்டுரை, பேச்சு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

கட்டுரை, பேச்சு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

திருவள்ளூர்:செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது.கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை, செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்காக, பேச்சு போட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளது. தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் இப்போட்டி, திருவள்ளூர் சி.எஸ்.ஐ., கவுடி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். பள்ளி மாணவ -மாணவியருக்கு மே 5ம் தேதியும், 6ம் தேதி கல்லுாரி மாணவ - மாணவியருக்கும் போட்டிகள் நடத்தப்படும்.போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், https://tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக பெற்று, ஏப்., 18ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.மாவட்ட போட்டிகளில் முதல் பரிசு பெறுவோர், மே 17ம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் பங்கேற்பர். அதில், முதல் மூன்று இடங்களை பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஜூன் 3ம் தேதி நடைபெறும் செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ