| ADDED : பிப் 05, 2024 11:32 PM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆலாடு, மனோபுரம், ஆண்டார்மடம், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், குற்ற செயல்களை கண்காணிக்கவும், அதில் ஈடுபடுவோரை கண்டறிய வசதியாகவும், முக்கிய சாலைகளில் 'சிசிடிவி' க்கள் பொருத்தப்பட்டன.அந்தந்த பகுதி காவல் நிலையங்களால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாததால் காலப்போக்கில் அவை செயலிழந்தன. தற்போது அவை பயனற்று ஆங்காங்கே வெறும் காட்சிப்பொருளாக இருக்கின்றன. இதனால் குற்ற சம்பவங்களை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இது குறித்து கிராமவாசிகள் தெரிவித்ததாவது:கிராமங்களில் 'சிசிடிவி' இருப்பதால், குற்ற செயல்களில் ஈடுபடுவோரும் எச்சரிக்கையாக இருக்கின்றனர். இதனால் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் குறைகின்றன. தற்போது இவை செயலிழந்து கிடப்பதால், சமூக விரோதிகளுக்கு வசதியாக உள்ளது. எனவே உடனடியாக இவற்றை சீரமைக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும் வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.