உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆற்றுப்படுகையில் உறை கிணறுகள் மூட விவசாயிகள் வலியுறுத்தல்

ஆற்றுப்படுகையில் உறை கிணறுகள் மூட விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் பாகசாலை துவங்கி கூடல்வாடி வரை கொசஸ்தலையாற்று படுகையில் பல கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில் கொசஸ்தலையாற்று நீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டது. மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது மற்றும் பருவ நிலை மாற்றத்தால் மழை பொழிவும் குறைந்ததால் கொசஸ்தலை ஆற்றில் கடந்த காலங்களில் நீர்வரத்து இல்லாததால்,ஆற்றங்கரையோரம் உள்ள கிணறுகள் ஊற்று கிடைக்காமல் வற்றின. இதனால் 30 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் சிலர், கொசஸ்தலையாற்றில் 'கை' வைக்கத் துவங்கினர். ஆற்றில் பாகசாலை, எல்.வி.புரம், ஓரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட கிணறு ஏற்படுத்தி நீரை உறிஞ்சினர்.தற்போது உறை கிணறும் தண்ணீர் இன்றி வற்றி பாழடைந்து உள்ளது. இதனால் வெள்ளக் காலத்தில் நீர் தடைப்படுவதுடன் அந்த கிணற்றில் கால்நடைகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றன.எனவே கிணறுகளை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை