உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மானிய விலையில் உரங்கள் விவசாயிகளுக்கு அழைப்பு

மானிய விலையில் உரங்கள் விவசாயிகளுக்கு அழைப்பு

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இவர்கள் நெல், வேர்க்கடலை, கரும்பு, சவுக்கு மற்றும் காய்கறி போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். தற்போது, விவசாயிகளுக்கு மானிய விலையில் உயிர் உரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்தணி பொறுப்பு வேளாண் உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் மற்றும் வேர்க்கடலை போன்ற பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ஜிங்க் சல்பேட் மற்றும் எம்.என்.மிக்சர் - நுண்ணுாட்ட கலவை உரம் ஆகிய உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக, 10 கிலோ ஜிங்க் சல்பேட், 3 கிலோ நுண்ணுாட்ட கலவை உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உரங்கள் தேவைப்படும் விவசாயிகள், ஆதார் கார்டு, நிலத்தின் கணினி சிட்டா ஆகியவற்றுடன் திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை பகுதிகளில் இயங்கி வரும் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு நேரில் சென்று உரங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர தார்பாய் மற்றும் விவசாய இடுபொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ