வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி
திருவள்ளூர்: வேளாண் சார்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், நிதியுதவி பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு, வேளாண்மை சார்ந்த புத்தாக்க நிறுவனங்களுக்கான, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், புதிய நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். ஏற்கனவே துவக்கப்பட்டு, சந்தைப்படுத்தும் முயற்சியில் உள்ள நிறுவனங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நிறுவனங்கள், www.agrimark.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன், திருவள்ளூர் மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.