உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  முன்னாள் படை வீரர்களுக்கு நிதியுதவி

 முன்னாள் படை வீரர்களுக்கு நிதியுதவி

திருவள்ளூர்: திருவள்ளூரில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், கலெக்டர் கொடிநாள் நிதி வசூலை துவக்கி வைத்து கல்வி உதவித்தொகையாக 7.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவிகளை வழங்கினார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் படைவீரர் கொடி நாள் வசூல் துவக்க விழா நடந்தது. கலெக்டர் பிரதாப், தலைமை வகித்து, கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவக்கி வைத்தார். பின், படைவீரர் கொடிநாள் நிதி கையேட்டை வெளியிட்டு, முன்னாள் படை வீரர்களின் 24 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 7.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவிகளை வழங்கினார். கலெக்டர் பேசியதாவது: நாட்டை பாதுகாக்க எல்லையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்யும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களின் நலனுக்கு கொடிநாள் வசூல் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் இலக்கான 5.78 கோடி ரூபாயை விட, தற்போது 6.37 கோடி ரூபாய் கொடிநாள் நிதி வசூல் செய்யப்பட்டு, இந்த ஆண்டு 110 சதவிகிதம் இலக்கு அடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டன்ட் கார்த்திக், முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் வெங்கடேஷ் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி