உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீன்வளக் கல்லுாரி மாணவர்கள் பழவேற்காடில் கள ஆய்வு

மீன்வளக் கல்லுாரி மாணவர்கள் பழவேற்காடில் கள ஆய்வு

பொன்னேரி:பொன்னேரி, டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள், நேற்று, பழவேற்காடு மீனவப் பகுதியில், மீன்வள பொருளியில் குறித்து, களஆய்வு மேற்கொண்டனர்.மாணவர்களின் நான்கு ஆண்டு படிப்பில், மீனவள பொருளியல் பற்றி அறிந்து கொள்வது முக்கிய பாடமாக இருப்பதன் காரணமாக, பழவேற்காடு மீன் விற்பனை அங்காடி, மீன்பிடி இறங்குதளம், மீனவ கிராமங்களில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளபட்டன.பழவேற்காடு ஏரி மற்றும் கடலில் எத்தனை வகையாக மீன்கள் கிடைக்கின்றன, அவற்றை விற்பனைக்கு எங்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தனர்.காலநிலை மாறறத்தால், மீனவளத்தில் ஏற்படும் பாதிப்புகள், மீனவர்கள் அன்றாட வாழ்வியல் முறை, பழவேற்காடு பகுதியில் இயங்கும் மீனவ கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.கல்லுாரியின் உதவி பேராசிரியர் முனைவர் சுருளிவேல், மீன்வள பொருளியியல் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை