/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு; நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்
ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு; நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்
ஊத்துக்கோட்டை : 'பெஞ்சல்' புயல் காரணமாக தமிழக - ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு, 3,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதன் இடையே நந்தனம் மற்றும் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் பெய்த மழை ஆகியவை சேர்ந்து, ஆரணி ஆற்றில் கலந்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.தமிழகத்தில், ஆரணி ஆறு செல்லும் பாதையில், சிட்ரபாக்கம், எ.என்.குப்பம், லட்சுமிபுரம் ஆகிய மூன்று அணைக்கட்டுகள், பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், எ.ரெட்டிப்பாளையம், ஆண்டார்மடம் ஆகிய ஆறு தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன.