எம்.ஜி.ஆர்., நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவிப்பு
திருத்தணி: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின், 38வது நினைவு நாளையொட்டி, நேற்று திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், அ.தி.மு.க., நகர செயலர் சவுந்தர்ராஜன் தலைமையில், எம்.ஜி.ஆர்., படம் மற்றும் அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் அரக்கோணம் அ.தி.மு.க., - எம்.பி., திருத்தணி கோ.அரி பங்கேற்று, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலைகள் அணிவித்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக, முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி.,யும், அமைப்பு செயலருமான திருத்தணி கோ.அரி, திருத்தணி - சித்துார் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்தார். பின், அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நகர நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.