உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிராம சேவை மைய கட்டடத்தில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளி

கிராம சேவை மைய கட்டடத்தில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளி

சோழவரம்:சோழவரம் ஒன்றியம், நெற்குன்றம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கான கட்டடம் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முகப்பில் இருந்தது.கட்டடம் சேதம் அடைந்ததை தொடர்ந்து, மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு, முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. மாணவர்கள் அதே வளாகத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.ஓராண்டு ஆன நிலையில், இடிக்கப்பட்ட பள்ளி கட்டடத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம சேவை மைய கட்டடத்தில் மாணவர்களுக்கு போதிய வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருபவர்களின் வாகனங்களும், அங்கு நிறுத்தப்படுவதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாணவர்கள் நலன்கருதி, இடிக்கப்பட்ட இடத்தில் பள்ளிக்கான புதிய கட்டடம் கட்டிட ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை