நுழைவாயில் இல்லாத அரசு பள்ளி
ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில், 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இரண்டு அரசு தொடக்கப் பள்ளிகளும், ஒரு மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.மேல்நிலைப் பள்ளிக்கு, ஊருக்குள் உள்ள பழைய பள்ளி வளாகத்திற்கு கூடுதலாக, கிராமத்தின் மேற்கில் மலை அடிவாரத்தில் கூடுதல் கூடுதல் கட்டடமும் செயல்பட்டு வருகிறது. மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கு நுழைவாயில் அமைக்கப்படவில்லை.நுழைவாயில் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் வெளி நபர்களும் பள்ளிக்குள் ஊடுருவும் நிலை உள்ளது. பள்ளியின் பாதுகாப்பு கருதி இந்த பள்ளி வளாகத்திற்கு நுழைவாயில் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.